2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

வளர் நிலை பாடல்கள்

Sunday 24 October 2010

|



கதிரவன் எழுவான் கிழக்கு
கடமை முடித்தால் மேற்கு
இதுவே இயற்கை வழக்கு
இதுபோல் உன்னைப் பழக்கு.

மழையே மழையே வாராய்
மண்ணில் பெய்வாய் சீராய்
வெள்ளம் பெருகும் ஆறாய்
மகிழும் உயிர்கள் பாராய்.

அம்மா சொல்லும் மாடு
அன்னை நிலமே நாடு
சும்மா இருந்தால் கேடு
தூய தமிழில் பாடு.

கிளியே கிளியே கிளியக்கா
கிளையில் தாவுது குரங்கக்கா
கிளியும் சொல்லுது அக்கக்கா
கிள்ளை மொழியோ இனிதக்கா.

பட்டாம்பூச்சி பறக்குது பார்
பள்ளிக்கூடம் திறக்குது பார்
விட்டபாடம் தொடங்குது பார்
விடுமுறை எல்லாம் கழிந்தது பார்.



திங்கள் செவ்வாய் அறிவன்
வியாழன் வெள்ளி காரி
ஞாயி றோடு ஏழு
நாட்களே ஒரு கிழமை.

ஓடிவந்து நில்லு
ஒன்றிரண்டு சொல்லு
ஏடெடுத்துக் கல்லு
என்றும் பள்ளி செல்லு.

அதோ பாரு மயிலு
அழகாய்ப் பாடுங் குயிலு
சூடு ஏற்றம் வெயிலு
சுணக்கம் விட்டு முயலு


குட்டி முயல் ஓடுது
குதித்துக் குதித்து ஓடுது
தொட்டுப் பிடிக்க ஓடினேன்
தாவிக் குதித்து ஓடுது.

தட்டு தட்டு கைதட்டு
தம்பி, பாப்பா கைகதட்டு
மொட்டுக் கையை நீதட்டு
முத்தம் தருவேன் கைதட்டு.

பள்ளி செலலப் போகிறேன்
பாடம் படிக்கப் போகிறேன்
படித்து எழுதி நானுமே
பாரில் உயரப் போகிறேன்.


தமிழே வணக்ககம்
தாயே வணக்கம்
அமிழ்தே வணக்கம்
அருள்வாய் எனக்கும்.

அம்மா அம்மா தமிழம்மா
அமிழ்தம் உன்றன் மொழியம்மா
அன்புப் பிள்ளை நானம்மா
அருள்வாய் எனக்கும் நியம்மா.


பெரிய யாணை வந்தது
சிறிய கண்ணால் பார்த்தது
அசைந்து அசைந்து நடந்தது
அச்சம் விலகிப் போனது.

சிட்டுக் குருவி அங்கேபார்
சிறகை விரிக்கும் அழகைப்பார்
பட்டுப் போன்ற மேனியை
படபடக்கும் அழகைப் பார்..


கோழி கோழி வாவா
கொண்டைக் கோழி வாவா
கொல்லைப் பக்கம் வாவா
கொத்தித் தின்ன வாவா

குவாக் குவாக் வாத்து
குட்டைக் காலு வாத்து
குதித்து ஓடும் வாத்து
குளத்தில் நீந்தும் வாத்து.


பாட்டி எனக்குப பாட்டி
அன்பு மிக்க பாட்டி
தங்க நிலாக் காட்டி
சோறு ஊட்டும் பாட்டி.

பூ பூ முல்லைப் பூ
குட்டி குட்டி வெள்ளைப்பூ
வீட்டுத் தோட்டத் தரையிலே
கோலம் போடும் வெள்ளைப்பூ.



தமிழே எங்கள் மொழியாகும்
தாயைப் போன்றே துணையாகும்
என்றும் வாழ்வில் கற்றிடுவோம்
ஏற்றம் மிகவே வாழ்ந்திடுவோம்.

மரங்கள் வீட்டில் வளர்த்திடுவோம்
பயன்கள் பலவும் பெற்றிடுவோம்
நிழலும் காற்றும் ஈந்திடுமே
நீங்கா வெப்பம் தணிந்திடுமே.



புள்ளிப் புள்ளி மான்கள்
துள்ளித் துள்ளி ஓடும்
முட்டி முட்டிக் கன்றும்
சொட்டிச் சொட்டிக் குடிக்கும்

முத்தமிழ் மொட்டே சாய்ந்தாடு
முத்த மழையே சாய்நதாடு
முத்தின் ஒளியே சாய்ந்தாடு
தித்திக்கும் தேனே சாய்ந்தாடு.



அம்மா என்னைப் பாரம்மா
அன்புப் பிள்ளை நானம்மா
அழகாய்ப் பாடு வேனம்மா
அனைத்தும் தமிழ் தானம்மா.



சின்னஞ் சிறிய பொம்மை
சிரிக்கும் அழகு பொம்மை
கண்ணைக் கவரும் பொம்மை
காசு கேட்கா பொம்மை.



கொடியில் பூத்த பூக்கள்
கொள்ளை அழகு பூக்கள்
செல்வி தலையில் பூக்கள்
சிரிக்கும் முல்லைப் பூக்கள்.



அமுதம் எஙகே சொல்லம்மா
அழகுத் தமிழின் சொல்லம்மா
நமது கண்கள் மொழியம்மா
நன்மை காட்டும் வழியம்மா.



பாப்பா பாப்பா கைவீசு
பைந்தமிழ் படிக்கக் கைவீசு
ஒற்றுமை ஓங்கக் கைவீசு
உண்மை பேசக் கைவீசு.
.


எறும்புக் கூட்டம் போலவே
இணைந்து வாழப் பழகுவோம்
கூடிவாழும வாழ்விலே
கோடி கோடி நன்மையே.


காக்கா பாரு பாப்பா
கருப்பு நிறம் பாப்பா
காக்கா மனசோ வெளுப்பு
கற்றுக் கொள்ளு படிப்பு.



பச்சைக் கிளிகள் பாடும்
பறந்தே இரையைத் தேடும்
இச்சைக் கனியை நாடும்
இனிய இசையால் பாடும்.


மல்லிகைப் பூக்கள் வெள்ளை
தாத்தா வேட்டி வெள்ளை
இட்லி கூட வெள்ளை
எங்க மனசும் வெள்ளை.



குட்டிநாயும் குரைக்குது
குட்டை வாலை ஆட்டுது
எட்டி மேலே பாயுது
எங்கும் ஓடி வருகுது.

மயிலே மயிலே நீ ஆடு
வண்ணத் தோகை விரித்தா
டு ஒயிலாய் ஒரு கால் எடுத்தாடு
உயரே முகிலைக் கண்டாடு.

காலையில் எழுந்ததும் குளித்திடுவேன்
கல்விக் கூடம் சென்றிடுவேன்
தாய்மொழிக் கல்வி கற்றிடுவேன்
தமிழால் நானும் உயர்ந்திடுவேன்.

கருப்பு யாணை பெரியது
கட்டெரும்போ சிறியது
இமயமலை பெரியது
இந்தக் கல்லோ சிறியது.

எனக்குக் கைகள் இரண்டு
எனக்குக் கால்கள் இரண்டு
எனக்குக் கண்கள் இரண்டு
எனக்குக் காதுகள் இரண்டு
மூக்கு மட்டும் ஒன்று
காதும் கூட ஒன்று.

எங்கள் வீடு பாருங்கள்
எளிய வீடு பாருங்கள்
சுற்றும் முற்றும் பாருங்கள்
சற்று நின்று பாருங்கள்
எங்கும் குப்பை இல்லையே
ஈயும் கொசுவும் இல்லையே.

அம்மா நல்ல அம்மா
ஆசையுள்ள அம்மா
என்னை விட்டு அம்மா
இருக்க மாட்டாங்க சும்மா.

எங்கள் வீடு தமிழ் வீடு
எங்கள் நாடு தமிழ்நாடு
எங்கும் எதிலும் தமிழ் பேசும்
எங்கள் மக்கள் தமிழ் மக்கள்








கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.




தமிழே அமுதே நீ வாழ்க
தண்டமிழ் மொழியே நீ வாழ்க
தேனே சுவையே நீ வாழ்க
தென்றல் காற்றே நீ வாழ்க

பொதிகை பிறந்த பூந்தமிழே
பூமகளே உன் புகழ்வாழ்க
இமயம் போலே நீயுயர்ந்து
என்றும் புகழாய் வாழியவே.




அம்மா கண்ணே அருகேவா
அழகுச் சிலையே அருகேவா
அப்பா செல்லம் அருகேவா
அழகுக் கிளியே அருகேவா

பட்டே சிட்டே அருகேவா
பழமே சுவையே அருகேவா
மொட்டே மலரே அருகேவா
முந்திரிச் சுவையே அருகேவா




"அ" முதல் "ஒள" வரை பனிரெண்டும்
அமுதத் தமிழின் உயிரெழுத்தாம்
"அ" "இ" "உ" "எ" "ஒ" ஐந்தும்
அளவொலி குறைந்த குற்றெழுத்தாம்
"ஆ" "ஈ" "ஊ" "ஏ" "ஐ" "ஓ" "ஒள"
அளவொலி மிகுந்து நெடிலெழுத்து


புன்னகை என்றும் புரிந்திடு
பொய்களை எதிர்த்து வென்றிடு
அனைத்து மொழியும் கற்றிடு
அமுதத் தமிழில் பேசிடு
கூடா நட்பை வெறுத்திடு
கூடி நீயும் வாழ்ந்திடு
விடாமல் முயற்சி செய்திடு
வெற்றிக் கனியைப் பறித்திடு

பள்ளி பள்ளி பள்ளி
பாடம் படிக்கப் பள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
விளையாடுவோம் துள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி
அக்கா கொலுசு வெள்ளி
அல்லி அல்லி அல்லி
அழகு மலரே அல்லி.




பெற்றோர் காத்தல் நம்கடனே
பெரிதாய்க் கற்றல் நம்கடனே
உற்றார் போற்ற வாழ்ந்திடுதல்
உலகின் முதன்மைக் கடனாகும்.

வெற்றுப் பேச்சில் காலந்தான்
வீணாய்ப் போகும் அதனாலே
குற்றம் இல்லா வாழ்வுதனைக்
குறிக்கோளுடனே வாழ்ந்திடுவோம்.




அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
செல்லப் பிள்ளை நான்
அண்ணணுக்கும் தம்பிக்குந்தான்
அன்புப் பிள்ளை நான்
ஆசிரியர் அனைவருக்கும்
ஆசைப் பிள்ளை நான்
வாழ்வில் ஓங்கி உயர்ந்திடவே
படிக்கும் பிள்ளை நான்.




கோழி நல்ல கோழி
முட்டை யிடும் கோழி
குள்ள மான கோழி
குஞ்சைக் காக்கும் கோழி

பருந்து குஞ்சைத் தூக்கிட
பறந்து கிட்டே வந்திடப்
பாய்ந்து விரட்டும் கோழி
தாய்மை மிக்க கோழி


ஓடிப் பிடித்து விளையாடி
ஒன்றாய்ச் சேர்ந்து பழகிடுவோம்
கூடிப் பேசி மகிழ்ந்திடுவோம்
குணத்தில் சிறந்து விளங்கிடுவோம்

மானைப் போலே துள்ளிடுவோம்
மயிலைப் போலே ஆடிடுவோம்
தேனைப் போலே இனித்திடுவோம்
சேர்ந்தே கூடி மகிழ்ந்திடுவோம்




சிட்டுக் குருவி வானிலே
சிறகடித்துப் பறக்குது
கொட்டும் அருவி மலையிலே
சலசலத்துக் கொட்டுது

குருவிபோல நாமுமே
கூடிவாழப் பழகுவோம்
அருவி போல நாமுமே
அனைவர் போற்ற வாழுவோம்.




வெள்ளைப் பூனை வந்தது
வெறித்துப் பார்த்து நடந்தது
வீட்டில் எலியைக் கண்டது
விரட்டிக் கொண்டு சென்றது
ஓடி எலியும் ஓட்டையின்
உள்ளே சென்று மறைந்தது.
விரட்டும் பூனை நின்றது
மியாவ் மியாவ் என்றது.




அன்பே அமுதே எழுந்திடு
அன்னைத் தமிழை படித்திடு
அறிவாய் நீயும் வளர்ந்திடு
அறியாமை மீது போர்த்தொடு
உடும்பாய்க் கொள்கை பிடித்திடு
உயர்வு தாழ்வு சமனிடு
உரிமை மீட்கத் துணிந்திடு
உண்மை யாக வாழ்ந்திடு.

காய்ச்சிய நீரைக் குடி குடி
கரும்பை நன்றாய்க் கடி கடி
தாய்மொழிக் கல்வி படி படி
தடையாம் சுவரை இடி இடி
காற்றில் மாசு வடி வடி
மண்ணில் கழிவு துடி துடி
சாதிப் பாம்பை அடி அடி
துணிந்து செயலை முடி முடி.

கதிரவன் வந்தான் எழுந்திடு
கண்ணை நன்றாய்த் திறந்திடு
காலைக் கடனை முடித்திடு
கடமை செய்யத் துணிந்திடு
கல்விக் கரும்பைக் கடித்திடு
கசடை நீக்கிப் படித்திடு
கலைகள் அனைத்தும் கற்றிடு
காரிருள் நீக்கி வென்றிடு

0 comments:

Post a Comment

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Powered by Blogger.